கைதுசெய்யப்பட்ட கம்பியூட்டர் பாபா… நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகப் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

 

மத்தியப்பிரதேசத்தில் கம்பியூட்டர் பாபா எனப்படும் நாம்தேவ் தியாகி எனும் சாமியார் மிகவும் பிரபலமான மனிதராக இருந்து வருகிறார். சமீபத்தில் அம்மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களின்போது நாம்தேவ் தியாகி பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டார். முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அங்கு செயல்பட்டு வந்தது. அக்கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தனது 22 எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால் ம.பியில் காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது.

22 எம்எல்ஏக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இடைத்தேர்தலின்போது நாம்தேவ் தியாகி பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் இவருக்கு 40 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஆசிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜம்பூர்தி எனும் புறநகர் பகுதியில் இருக்கும் இந்த ஆசிரமத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பகுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மத்திய பிரதேச அரசாங்கம் கையகப்படுத்த முடிவு செய்ததோடு நாம்தேவ் தியாகிக்கு ரூ. 2 ஆயிரத்தை அபராதமாக விதித்து இருக்கிறது. மேலும் இன்று ஆக்கிரமிப்பு பகுதிகள் கையகப்படுத்தப் படுவதால் பாபா நாம்தேவ் தியாகி மற்றும் அவருடைய தொண்டர்கள் 6 பேர் பாதுகாப்பு நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா??? தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த சிக்கல்!!!

முன்னதாக மனிதர்களைத் தவிர சில விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கு: சூரியின் திடீர் கோரிக்கை!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சூரியிடம் ரூபாய் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது திடீரென சூரியின் தரப்பில் கோரிக்கை ஒன்று

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ்: 'பிக்பாஸ் தமிழ்' நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நீச்சல்குள பிகினி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது 

ரசிகர்களுக்கு தனுஷ் தரும் தீபாவளி விருந்து!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும்,

ஒரே ஒரு நபருக்கு கடிதம்: சோகமயமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்துள்ளனர்