ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 33 நீதிபதிகள் இருக்கிறார்கள். இதன் தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியாக எஸ்.ஏ போப்டே இருக்கிறார். மொத்தம் இரண்டு அரசியல் சாசன அமர்வு உள்ளது. 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இருக்கிறது. இந்த அமர்வுகள் எல்லாம் சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

யாருக்கு எல்லாம் இப்படி பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த 6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸ் மூலம் பரவும். இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடிய வைரஸ் ஆகும். மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட்தான் இந்த செய்தியை வெளியே தெரிவித்தது. 6 நீதிபதிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தார். அதேபோல் வழக்கறிஞர்கள் பலர் இன்று மாஸ்க் அணிந்தபடி வந்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகள் நீதிபதிகளின் விடுப்பு காரணமாக இன்று விசாரிக்கப்படாமல் போனது.

இந்த பன்றிக் காய்ச்சல் காரணமாக உச்ச நீதிமன்றத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மற்ற நீதிபதிகள் உடன் ஆலோசனை செய்து வருகிறார். இதற்காக நீதிபதிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடந்துள்ள நிலையில், இன்னொரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதில் முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். உச்ச நீதிபதிகள் ஆறு பேருக்கு ஒரே நேரத்தில் இப்படி பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் யார்? புதிய தகவல்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்

இந்திய மொழிகளின் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு தேசிய அளவில் 24 மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருதுகளை வழங்கி வருகிறது

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்

அமெரிக்க அதிபரின் மனைவியாக வலம் வரும் மெலானியாவின் வாழ்க்கை மிகவும் சுவாரசியம் நிறைந்தது மட்டுமின்றி வலிமை வாய்ந்ததாகவும் இருக்கிறது

டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..!

வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 160 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் நேற்று அவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு