close
Choose your channels

60 வயது மாநிறம்' சென்சார் மற்றும் ரன்னிங்  டைம் தகவல்கள்

Monday, August 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '60 வயது மாநிறம்'. ராதா மோகன் இயக்கிய இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 134 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 14 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் உள்ள படமாக உள்ளது.

இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.