கொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ் தன்னையும் தாக்கி இருக்கும் என அஞ்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த ராம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் கவுர். 60 வயதான இவருக்கு தொண்டையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அடிக்கடி இருமல் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷ் கவுருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் இது சாதாரண தொண்டை வலி தான் என்றும் கூறி அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை கொடுத்துள்ளார். இருப்பினும் அவரது உறவினர்கள் சிலர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தொடர்ந்து கூறி வந்ததை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் கவுர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு: மூடப்பட்டது பிரபல மருத்துவமனை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா விடுமுறையில் பால் கறக்க கற்று கொண்ட 'மாஸ்டர்' நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தீனா,

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விஜய்காந்த் செய்த மிகப்பெரிய உதவி

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் திண்டாடி வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும்

பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளம் குறைப்பு: 2 ஆண்டுக்கு எம்பி நிதியும் கிடையாது

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை சற்றுமுன் முடிவு செய்துள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்,

இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது.