தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்று 6,504 பேர்கள் கொரோனாவில் இருந்து மீண்டனர் என்பதால் இரண்டுமே புதிய சாதனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,785 பேர்களில் சென்னையில் மட்டும் இன்று 1299 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143,297 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 65,150 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 2.22 மில்லியன் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கொரோனா வைரஸ் ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறதா??? சுவாரசியம் நிறைந்த ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேகத்தை விட அதிவேகமாக அதன் தன்மை மற்றும் மரபணு போன்றவை மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை The Lancet ஆய்வு இதழ் எடுத்துக் காட்டியிருந்தது.

லாக்டவுனால் அதிகரித்த பாலியல் உபகரணங்கள் விற்பனை: தமிழகத்தில் படுஜோர் என தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்பட சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நாட்களில் உலகம் முழுவதும் பாலியல் உபகரணங்கள்

இந்த அப்பளம் கொரோனா வைரஸை தடுக்க உதவும்- சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பா.ஜ.க அமைச்சர்!!!

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும்

ரூ.5,136 கோடி மதிப்பிலான முதலீடு: 6,555 பேருக்கு வேலை!!! அதிரடி காட்டும் தமிழக முதலமைச்சர்!!!

இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.