close
Choose your channels

2 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு: குணமானோர் எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் நிம்மதி!

Saturday, July 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5000, 6000 என அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் குணமானோர் எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கையை விட உயர்ந்துள்ளதால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,537 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 89 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7758 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,055 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 64,315 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 22,87,334 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.