7 பேர் கைது, சமூக வலைத்தளங்களுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் இன்று காலை நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு சம்பவம் மேலும் தொடரும் என அஞ்சப்படுவதால் இலங்கையின் முக்கிய பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து கூறியபோது, 'மக்கள் குண்டுவெடிப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

More News

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

இலங்கையில் இன்று காலை மூன்று சர்ச்சுகள் மற்றும் நான்கு ஓட்டல்கள் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேர் பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால்

இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு: விரிவான தகவல்

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதி போருக்கு பின்னர் இன்று இலங்கையில் பயங்கர வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் நிலையில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்பு-கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்: அட்டகாசமான அறிவிப்பு

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராதிகா

இலங்கையில் இன்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்நாட்டில் உள்ள இரண்டு தேவாலயங்கள்