சென்னையில் ஒருநாள் குழந்தை உள்பட 7 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நாளில் இன்று 7 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பச்சிளங்குழந்தைகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று சென்னையில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் தற்போது பிறந்து ஒரே நாளான குழந்தை உள்பட சென்னையில் 7 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிறந்து ஒரே நாள் ஆன குழந்தை, 2 மாத குழந்தை, ஒன்றரை வயது குழந்தை, 3 வயது பெண் குழந்தைகள் இருவர், 3 மற்றும் 5 வயது ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு வந்தால் பெரியவர்களுக்கே மிகுந்த சிரமம் ஏற்படும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாத குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

அன்னையர் தினத்தில் முதல்முறையாக 'அம்மா' என கூப்பிட்ட குழந்தை: பிக்பாஸ் நடிகர் நெகிழ்ச்சி

ராதாமோகனின் 'அபியும் நானும்' கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

ஒரு பெண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

லாட்டரி, சூதாட்டம், கஞ்சா, பலான இடம், எல்லாத்தையும் திறந்துடுங்க: கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட விஜய்: லாக்டவுன் முடிந்ததும் சந்திக்க விருப்பம்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாக செய்தி வெளியிட்டு இருந்தார்.

கடவுள் வெளியே இல்லை, அம்மாவிடம் தான் உள்ளார்: ராகவா லாரன்ஸின் அன்னையர் தின வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில் இரண்டுக்கும் மேற்பட்ட அன்னையர் தின ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளன.