போதை பத்தல... சானிடைசர் குடித்த 7 பேர் பலி... பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

 

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது சிலர் போதைக்காக சானிடைசரை அருந்தி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதே டெக்னிக்கை ரஷ்யாவில் ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது சிலர் கடைப்பிடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி நகரில் டொமடோர் எனும் பகுதியில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அந்த விருந்து நிகழ்ச்சியின்போது மது பற்றாமல் சிலர் அதிக போதைக்காக சானிடைசரை குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் மேலும் 2 பேர் கோமா நிலைக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற சம்பவம் நமது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. முதலில் அதிகப் போதைக்காக சிலர் கள்ளச்சாரயத்துடன் சானிடைசரை கலந்து குடித்தனர். இதனால் 19 பேர் உயிரிழந்த நிலையில்  மீண்டும் அதே மாநிலத்தில் 3 பேர் தண்ணீரில் சானிடைசரைக் கலந்து குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தின் சிறையில் வைக்கப்பட்டு இருந்த கைதி ஒருவர் மது என்று நினைத்து  சானிடைசரைக் குடித்து உயிரிழந்தார். சானிடைசரில் 60% க்கும்மேல் ஆல்கஹால் இருப்பதை தெரிந்து கொண்ட சிலர் இப்படி அறியாமையினால் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்ந்து கொண்டே வருகிறது.

More News

நிவர் புயலை எதிர்க்கொள்ள தயாராகும் தமிழக அரசு… மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாலாஜி-ஷிவானி காதலின் ரகசியத்தை உடைத்த சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்த காட்சிகள் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த காதல் வழக்கம்போல் முந்தைய சீசன்களில் இருந்த செட்டப் காதல் தான் என்பதை

வங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா?

தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானதை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக

செல்போன் அலர்ஜியா??? இப்படியும் ஒரு விசித்திர மனிதன்!!!

பிரிட்டன் நாட்டில் வாழும் 48 வயதான ஒரு நபருக்கு மின்சாரத்தினால் இயங்கும் எந்தப் பொருட்களைப் பார்த்தாலும் அலர்ஜியாம்.

83 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உடலில் இருக்குமா??? பீதியை கிளப்பும் புதுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் ஒருவரைப் பாதித்தால் 14 நாட்கள் வரை மட்டுமே உடலில் இருக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு முதற்கொண்டு அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் அளித்து வந்தனர்.