தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: சுகாதார செயலாளர்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 485 பேர்களில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பியவர்கள் என்றும் 63 பேர் மட்டுமே பிறர் என்றும் சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய்சேதுபதிக்காக எழுதிய திரைக்கதை இதுதான்: சேரன்

பாரதி கண்ணம்மா படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான சேரன்,

காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்!!! உலக நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை !!!

உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது சில நாடுகள் மட்டும் நிம்மதி பெரூமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன.

கொரோனா விடுமுறையில் சூரி கூறிய பயனுள்ள யோசனை!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதுவரை சாப்பிட, தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக சுற்றியவர்கள் எல்லாம் கடந்த 10 நாட்களாக வீட்டை விட்டு வெளியே

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 601 பேர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது