close
Choose your channels

சிலம்பம் சுற்றி அசத்தும் மூதாட்டி: சிலம்ப பயிற்சி பள்ளி அமைக்க பிரபல நடிகர் ஆலோசனை

Friday, July 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தெருவில் சிலம்பு சுற்றி வித்தை காட்டிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே என்ற பகுதியை சேர்ந்தவர் சாந்தாபாய் என்ற மூதாட்டி 8 வயதிலிருந்தே சிலம்பம் உள்பட ஒருசில தற்காப்பு கலைகளை பயின்றுள்ளார். எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என தனது தந்தை தனது கற்றுக் கொடுத்ததாகவும், இதனால் இந்த வயதிலும் தான் சிலம்ப வித்தையை தெருவில் செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தில் தனக்கு தேவையானவற்றை வாங்கி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகர் சோனு சூட் அந்த பெண்ணின் விவரங்களை தனக்கு யாராவது அளிக்க முடியுமா? என்றும் அந்த பெண்ணை வைத்து பெண்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பயிற்சி மையத்தை அமைக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட் அவர்களின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் இந்த மூதாட்டி மூலம் பல இளம்பெண்கள் சிலம்பம் என்ற தற்காப்பு கலையை கற்று கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.