close
Choose your channels

16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்

Sunday, May 24, 2020 • தமிழ் Comments

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 765 எனவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 587 பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை தாண்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 833 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 111ஆகஉயர்ந்துள்ளது. மேலும் இன்று 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 391,252 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz