ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

நஷ்டத்தில் இயங்கிவரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 78,559 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவது நாட்டிலேயே முதன்முறை ஆகும். தனியார் நிறுவனங்களின் போட்டி காரணமாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நலிவடைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 1.63 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தடுமாறியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கான சிறப்பு விருப்ப ஓய்வுத் திட்டத்தை பல்வேறு சலுகைகளுடன் அறிவித்தது.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 92,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், 78,559 ஊழியர்கள் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இனிமேல், 80,000 ஊழியர்களுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்படும். நிறுவனத்தின் பல்வேறு வேலைகளை அவுட்சோர்ஸிங் வழியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் பிப்ரவரி மாதத்துக்குள் வழங்கப்படும். ஓய்வூதிய பணப் பலன்கள் முதல் பாதி மார்ச் மாத இறுதிக்குள்ளும் அடுத்த பாதி ஜூன் மாத இறுதிக்குள்ளும் இரு பகுதிகளாக வழங்கப்படவுள்ளது.

எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன. விருப்ப ஓய்வையடுத்து 4,340 ஊழியர்கள் பற்றாக்குறையுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்படும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் போலவே, நஷ்டத்தில் இயங்கும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமாக ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகளுடன் விருப்ப ஓய்வு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 17,984 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 9,617 பேர் நிரந்தர ஊழியர்கள். தற்போது ஏர் இந்தியாவின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 'ஹிந்துஜா' குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முனைப்பு காட்டுகிறது.

More News

இந்தியச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பவன் சுகதேவிற்கு நோபால் பரிசான  “டைலர் விருது”

சுற்றுச்சூழல் துறையில் நோபால் பரிசான “டைலர் விருது” இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பவன் சுகதேவ் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

தனியாருக்கு விற்கப்படும் LIC,IDBI பங்குகள்.. குறையும் தனிநபர் வருமான வரி..! மத்திய பட்ஜெட் 2020.

நாடாளுமன்றத்தில் இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நண்பனின் திருமணத்திற்கு சென்று வாழ்த்து கூறிய சிம்பு!

அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவருமான

உங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..!

பாதுகாப்பு வேண்டிப் பதிவிறக்கப்படும் இந்த மென்பொருளே நமது தகவல்களை வைத்து எப்படி வியாபாரம் பார்க்கிறது என்ற திடுக்கிடும் ரிப்போர்ட் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்