close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 80s வில்லன்.. இன்னும் எத்தனை வில்லன்கள்?

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ‘லியோ’ படத்தில் ஏற்கனவே பல வில்லன் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக 80s நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜூன், உள்பட ஒருசிலர் வில்லன்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த 80கள் மற்றும் 90களில் பல திரைப்படங்களில் வில்லன்களாக நடித்த நடிகர் பாபு ஆண்டனி இந்த படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

‘மக்கள் என் பக்கம்’ ’பூவிழி வாசலிலே’ ’மைடியர் லிசா’ ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடிகர் பாபு ஆண்டனி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ‘லியோ’ படத்தில் இன்னும் எத்தனை வில்லன்கள் தான் இணைவார்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

லலித தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.