டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறியா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அந்த மாநாட்டிற்குப் பின்னர் தமிழகம் திரும்பிய பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் டெல்லியில் இருந்து திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 82 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அவர்களுடைய ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா இருக்கின்றதா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மீண்டுவருவோம்; நம்பிக்கையளிக்கும் விதத்தில் “கோவிட்” எனப் பெயர்சூட்டப்பட்ட புலிக்குட்டி

மெக்ஸிகோவின் கோர்டபா நகரில் உள்ள ஒரு தனியார் மிருககாட்சி சாலையில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு “கோவிட்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 74 ஆனது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி மாநாடு??? நடந்தது என்ன???

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்கள் மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல்

கடைகளில் வாங்கும் காய்கரி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருக்குமா என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க உணவுப்பொருள் வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பேர் கொரோனாவால் பலி: அதிர்ச்சி தகவல்

மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதில்