தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 பேர் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களுக்கு முன் வரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெறும் 17 மட்டுமே இருந்த நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மார்ச் 31ஆம் தேதி 57 பேர்களும், ஏப்ரல் 1ஆம் தேதி 110 பேர்களும், ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேர்களும், ஏப்ரல் 3ஆம் தேதி 102 பேர்களும் ஏப்ரல் 4ஆம் தேதி 74 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று 86 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்ததையும் சேர்த்து மொத்தம் 571 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் அதில் நேற்றும் இன்றும் மட்டும் 4 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவில் ஒரே நாளில் 11 பேர் பலி: மொத்த எண்ணிக்கை 79ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14ம் முடிவடைவதால்

ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும்

ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கும்

மோடி ஏன் விளக்கேற்ற சொன்னார்? காயத்ரி ரகுராம் விளக்கம் 

இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு தீபம் ஏற்றும்படி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள்