கட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...! மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

தமிழகத்தில் மாநில தலைமை ஆணையம் 'ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்' பொறுப்பில் உள்ள 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வு பெற பரிந்துரை செய்துள்ளது.

சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் கடந்த 2011 -2020 வரை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர்களாக பணியாற்றியவர்கள். உதவிப் பேராசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவருவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

உதவிப்பேராசிரியர் தேர்வில், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. சரியான விடையளித்தவர்களுக்கு, மதிப்பெண்கள் வழங்காமல் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், தேர்வர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக நடைபெற்ற தேர்வுகளில், வெளிப்படைத்தன்மை இல்லை என்று தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

மாநில தகவல் ஆணையம், தமிழகத்தலைமை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பேரில் ஓரிரு நாட்களில் தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புகாரளித்துள்ள 9 ஐஏஎஸ் அதிகாரிகளில், சுர்ஜித், விபு நாயர் ஆகியோரை தவிர 7 பேர் பணியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் தங்க நகை தயாரித்து விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவரின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ

டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா, 'நீ சுடத்தான் வந்தியா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் முழுக்க முழுக்க கவர்ச்சி அம்சம் கொண்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது

பரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் நேற்று வெளியானது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடலை: செஃப் தாமு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமானதற்கு 'குக்'கள் மற்றும் கோமாளிகள் மட்டுமின்றி இரண்டு நடுவர்களும் காரணம் என்பதை மறுக்கவே முடியாது

விஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின்!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில்