உலகின் மிகப்பெரிய மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்தியச் சிறுமி!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

உலகிலேயே உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடுத்து 2 ஆவது உயரமான மலை சிகரமாகக் கருதப்படுவது கிளிமஞ்சாரோ. இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா எனும் நாட்டில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,681 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை சிகரத்தில் ஏறுவதை மலையேற்ற வீரர்கள் பலரும் சவாலாக கருதி வருகின்றனர். அந்த சவாலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி வெற்றிப் பெற்று உள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ எனும் 9 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் உள்ள கில்மன் சிகரத்தில் ஏறி வரலாற்றிலேயே புது சாதனை படைத்து இருக்கிறார். இதனால் உலகிலேயே மிகச் சிறிய வயதில் கிளிமஞ்சாரோவில் ஏறிய 2 ஆவது இளம் வயதுக்காரர் என்ற பட்டத்தையும் ஆசியாவிலேயே முதல் இயம் வயதுக்காரர் என்ற அடையாளத்தையும் பெற்று இருக்கிறார்.

பள்ளியில் படித்து வரும் ரித்விகா ஸ்ரீ தனது தந்தையுடன் மலையேற்றப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு இந்த சாதனையைப் படைத்து இருக்கிறார். முதலில் தெலுங்கானாவில் உள்ள போங்கிர் எனும் மலையேற்றப் பள்ளியில் படித்ததாகவும் அடுத்து லடாக்கில் உள்ள மலையேற்றப் பள்ளியில் படித்ததாகவும் சிறுமி குறிப்பிட்டு உள்ளார். 9 வயதில் கிளிமஞ்சாரோ சாதனையைப் பார்த்து மிரண்டு போன அனந்தபூரின் மாவட்ட ஆட்சியர் தனது டிவிட்டரில் சிறுமி ரித்விகா ஸ்ரீ க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உள்ளார்.