தளபதி 66: விஜய் சகோதரராக 90களின் வெள்ளிவிழா நாயகன்?

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் 90களில் வெள்ளி விழாப் படங்களை கொடுத்த நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் சரத்குமார் விஜய்யின் தந்தையாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் விஜய்யின் சகோதரர்களாக 90களில் பிரபலமான இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கடந்த 90 களில் பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்த நடிகர் மோகன், விஜய்யின் ஒரு சகோதரராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் மோகன் தற்போது ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மது குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்… சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல இயக்குநர்!

கன்னட சினிமா இயக்குநராக அறிமுகமாகி தற்போது கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா இயக்குநராக உலகம்

இதுவரை தமிழ்ப்படம் வெளியாகாத நாடு: முதல் படமே 'பீஸ்ட்' தான்!

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாட்டில்  முதல் முறையாக 'பீஸ்ட்' என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனை!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.26 கோடி பிளாட்,  ரூ.1.3 கோடி ஆடிக்கார்: பரிசுமழையில் குவிந்த ரன்பீர்-ஆலியா பட் ஜோடி!

பாலிவுட் காதல் ஜோடிகளான ரன்பீர் மற்றும் ஆலியா பட் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில்

இரண்டாவது திருமணத்திற்கு நாகசைதன்யா போட்ட ஒரே ஒரு கண்டிஷன்!

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தனது பெற்றோரிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .