50வது நாளை காணும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன படங்கள்

  • IndiaGlitz, [Friday,November 23 2018]

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அதில் உண்மையான வெற்றி பெறும் படங்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த வருடம் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்கள் வெளியாகியுள்ளதால் திரையுலகினர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன இரண்டு படங்கள் தற்போது 50வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆம், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷாவின் '96' திரைப்படம் நேற்றும், அக்டோபர் 5ஆம் தேதி வெளியான விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்' திரைப்படம் இன்றும் 50வது நாளை எட்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் போலியான வசூல் தகவல்கள் இன்றி உண்மையாகவே ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படக்குழுவினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்

 

More News

ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, தற்போது 'காஞ்சனா 3', '96ml', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் களவாணி 2'

ரஜினியுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும்

4 ரூபாய்க்கு சாப்பாடு: பிரபல நடிகை தொடங்கிய ஓட்டல்

முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகத்தில் ரூ.1க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம்

ஐந்தாவது மொழியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சிங்கம்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது

மீண்டும் தனுஷுடன் இணையும் வரலட்சுமி?

நடிகர் தனுஷின் 'மாரி 2' படத்தில் நடிகை வரலட்சுமி, ஐஏஎஸ் அதிகாரி விஜயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விருந்தாக வெளிவரவுள்ளது.