close
Choose your channels

'96' பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று மட்டுமின்றி ரசிகர்களின் மனதில் நீண்டகாலம் நிற்கும் ஒரு படமாகவும் அமைந்துள்ளது. ராம், ஜானு கேரக்டரை சினிமா ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் '96' படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே அந்த படத்தின் வெற்றியால் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த குட்டி ஜானு நடிகை கவுரி கிஷான் ஏற்கனவே ஒரு மலையாள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'ராம்' கேரக்டரின் மாணவிகளில் ஒருவராக நடித்த வர்ஷாவும் தற்போது நாயகியாகியுள்ளார். ராஜ் கண்டுகுரி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய தெலுங்கு படம் ஒன்றில் அவருடைய மகன் ஷிவா ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க வர்ஷா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சேஷா சித்து இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.