98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான ரஜினி, கமல், அஜித் பட நடிகர்!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

ரஜினி, கமல், அஜித் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த 98 வயது நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’, கமலஹாசன் நடித்த ’பம்மல் கே சம்பந்தம்’, அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. சமீபத்தில் இவர் தனது 98வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய மகன் பவதாசன் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயது உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்கள் பூரண குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று அவருடைய மகன் தெரிவித்துள்ளார்

உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அவரை இந்த கொடிய நோயிலிருந்தும் குணமாகி வந்ததற்கு காரணம் என்றும் உன்னி கிருஷ்ணன் அவர்கள் தனது இளவயதில் சொந்தமாக ஜிம் வைத்து உடலை கட்டு கோப்பாக வைத்து இருந்தார் என்றும் அவருடைய மகன் தெரிவித்துள்ளார்

தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் 98 வயதில் கொரோனாவை வென்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

ஜோ பிடன் நிர்வாகத்தில் 20 இந்தியர்கள்… நீண்டுகொண்டே இருக்கும் பட்டியல்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் நாளை மறுநாள் பதிவேற்க இருக்கிறார்.

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய பேரறிவாளர் தாயார்!

பிக்பாஸ் என்பது மற்ற மொழிகளில் ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தமிழில் மட்டும் இந்நிகழ்ச்சி பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆக்கபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசன் கொண்டு செல்கிறார்

விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினியிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியலை தமிழகத்தில் அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஜினி மக்கள்

சுமார் 5000 கிமீ பைக்கில் எங்கு சென்றார் தல அஜித்?

தல அஜித் அவர்கள் ஒரு பைக் விரும்பி என்பதும் அவர் பல நேரங்களில் நீண்ட தூரம் பைக்கில் செல்வது குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதும் தெரிந்ததே

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு… மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.