close
Choose your channels

சென்னையில் 'மருது' வசூல் எவ்வளவு?

Monday, May 23, 2016 • தமிழ் Comments

விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் முத்தையா இயக்கிய 'மருது' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் 'மருது' வசூல் செய்த தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
இந்த படம் சென்னையில் 21 திரையரங்குகளில் 257 காட்சிகள் ஓடி ரூ.69,85,455 வசூல் செய்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 85% பார்வையாளர்கள் நிறைந்துள்ளனர்.
 
இதேபோல் அதே நாளில் ரிலீஸ் ஆன மகேஷ்பாபுவின் 'பிரம்மோத்சவம்' திரைப்படம் சென்னையில் 11 திரையரங்குகளில் 131 காட்சிகள் ஓடி, ரூ.42,28,640 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz