நம்ம ஊரில் 10 கோடி வருடங்களாக தொடர்ந்து வாழும் மீன்… உலக விஞ்ஞானிகளையே ஆச்சர்ய மூட்டிய சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

 

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையின் போது அங்குள்ள வயல்வெளிகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. அந்த சமயத்தில் மலப்புரம் எனும் பகுதியில் வித்தியாசமான ஒரு வகை மீன் இனம் தன்னுடைய வயலில் சுற்றித் திரிந்ததை பார்த்த ஒரு விவசாயி அதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த மீனைப் பார்க்கும்போது உலகத்திலேயே இதுவரை பார்த்திராக உயிரினமாக தெரிந்து இருக்கிறது.

இந்தப் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் கடந்த 2 வருடமாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் மீனவர்கள், மீன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், அபூர்வ உயிரினங்களை குறித்து ஆராயச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் என ஒருவராலும் இந்த உயிரினம் என்ன என்பது குறித்து கண்டறிய முடியவில்லை. இதனால் உலக விஞ்ஞானிகளிடையே புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம் மேலும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த உயிரினத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து மீன் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஒரு விஞ்ஞானிகள் குழு கேரளாவிற்கு விரைந்து இருக்கிறது. அவர்கள் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தபடி கொச்சி அடுத்த மலப்புரம் பகுதியிலுள்ள அந்த விவசாயியின் வீட்டிற்கு விரைந்தனர். மேலும் மீன் இருந்ததாகச் சொல்லப்பட்ட வயல்வெளி பகுதியில் கடுமையான தேடுதலை நடத்தி இருக்கின்றனர். அப்படி நடத்திய தேடுதலில் முதலில் அரிய வகை மீன் இனத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இரவில் அந்த மீன் வயல்வெளிக்கு மேலே வந்திருக்கிறது. அப்போது அந்த மீனை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்து இருக்கின்றனர்.

இந்தத் தகவல்தான் தற்போது கேரளாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இந்த உயிரினம் மண்ணுக்கு அடியில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன் வகை என்பதைக் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் கடந்த 10 கோடி வருடங்களாக இந்த வகை மீன் உயிரினம் பூமியில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதில் உள்ள ஆச்சர்யம் என்னவென்றால் இந்த உயிரினம் கடந்த 10 கோடி வருடங்களாக எந்த ஒரு மாற்றத்தையும் அடையாமல் அப்படியே நம் கேரளாவில் வாழ்ந்து வருவதுதான் பெரும் வியப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த காலங்களில் வாழ்ந்த உயிரினங்கள் எல்லாம் பொதுவாக காலம் செல்ல செல்ல பல மாற்றங்களை அடைந்து வருவது இயல்பு. மேலும் இத்தனை கோடி ஆண்டுகளாக எந்த ஒரு உயிரினமும் தொடர்ந்து வாழ்ந்ததை விஞ்ஞான உலகம் இதற்கு முன் கண்டதில்லை. அப்படி இருக்கும்போது டிராகன் ஸ்நேக்ஹெக் (dragon snakehead fish) எனப்படும் கோண்ட்வானன் இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மீனை முதல் முதலாக கடந்த 10 கோடி வருடங்களாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கேரளாவின் Aquifers எனப்படும் மண்ணுக்கு அடியில் உள்ள நீர் நிலைகளில்தான் இந்த வகை உயிரினம் வாழ்வதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதேபோல 10 இன வகை மீன்கள் இருப்பதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் அரிய வகை மீன் இனத்திற்கு புதிதாகப் பெயரும் சூட்டப்பட்டு இருக்கிறது. அப்படி சூட்டப்பட்ட பெயர்தான் Aenigmachana. அதில் இன வேறுபாட்டை குறிக்கும் வகையில் Aenigmachana mahabali, aenigmachana Gollum என்ற பெயர்களும் சூட்டப்பட்டு இருக்கிறது.

10 கோடி வருடத்துக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் இந்த வகை மீன்கள் அந்த உலகத்துக்கு ஏற்றபடி தற்போதும் கேரளாவில் வாழ்ந்து வருகிறது. இந்தக் கருத்து உலக விஞ்ஞானிகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இத்தனை கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் மட்டுமே. ஆனால் டைனோசரின் சில அடையாளங்களை மட்டுமே நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

அந்த வகையில் வரலாற்று காலத்திற்கு முந்திய ஒரு உயிரினம் இன்றைக்கும் வாழ்வது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் நமது இந்தியாவில், நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இத்தனை கோடி வருடங்களைத் தாண்டியும் டிராகன் ஸ்னேக் ஹெக் மீன் எனப்படும் இந்த அரிய வகை மீனில் எந்த உருவ மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் இந்த மீன் வகை மண்ணுக்கு அடியில் வாழ்ந்து வருவதுதான் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கேரளாவில் தற்போது அடிக்கடி ஏற்பட்டு பெருமழை காரணமாக இந்த வகை மீன்கள் மண்ணுக்கு மேலே வந்திருக்கலாம் எனவும் கணித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 34 -109 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளில் இதேபோன்ற 50 வகை இன மீன்கள் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். தென் ஆப்பிரிக்க பகுதியில் வாழ்ந்த இந்த உயிரினம் 10 கோடி வருடங்களைத் தாண்டி தற்போதும் இந்தியாவில் இருப்பது பெரும் வரவவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த வகை மீன்கள் சுருக்கம் கொண்ட நீந்தும் இறக்கைகளை தனது உடலில் வைத்திருக்கிறது. மேலும் சிறுநீர்ப்பை, குறுகிய விலா எலும்பு, குறைந்த முதுகெலும்பு பகுதி, பாம்பு போன்றே இருக்கும் சிறிய தலை, சிவந்த அல்லது பழுப்பு நிறம் கொண்ட கண்கள் என இதன் உடலமைப்பே படு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் மண்ணுக்கு அடியில் வாழும் தன்மைக் கொண்டதால் பெரும்பாலான மீன்களுக்கு கண்ணே தெரியாது எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் மண்ணுக்கு அடியில் வாழும் இந்த வகை மீன்கள் அங்குள்ள குறைந்த காற்றை சுவாசித்து வாழ்வதற்கு ஏற்ற தன்மையைக் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதோடு டிராகன் போல இந்த மீனும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

More News

2021 ஐ.பி.எல் போட்டி… சிஎஸ்கேவின் கேப்டன் யார்??? பரபரப்பு தகவல்!!!

தற்போது நடைபெற்று வரும் 2020 ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “பிளே- ஆப்” சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம்!!!

நீட் தேர்வில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பொய் வழக்கு தொடுத்த மாணவி ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பாகி இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டின் புது ஜோடி ஷிவானி-பாலாஜி?

பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் கடந்த சில நாட்களாக சிறுசிறு மோதல் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென மோதல் வெடித்தது. கிளீனிங் டீமில் உள்ள பாலாஜி

மிரட்டல் விவகாரம், நடந்தது என்ன? சீனுராமசாமி பேட்டி

தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு முதல்வர் ஐயா உதவ வேண்டும் என்றும் சற்று முன்னர் இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி: ஒரே படத்தில் முன்னணி நட்சத்திரங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது முன்னணி இயக்குனர்கள் அனைவரும் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.