மீண்டும் ஒரு ஆழ்துளை துயர சம்பவம்: 3 வயது குழந்தையின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2020]

தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த ஆண்டு விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பதும் அதன் பின்னராவது இதுபோன்ற துயரச் சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று வயது குழந்தை மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரித்விபூர் என்ற கிராமத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் மேலும் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது என்பதும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து குழந்தையை உயிரோடு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதுகுறித்து மீட்புப் படையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறிய போது ’குழந்தையின் சத்தம் இன்னும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் எனவே குழந்தை உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த குழந்தையை உயிரோடு மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்