close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'அஞ்சலி' பட நடிகர்!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படம் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது 'பொன்னியின் செல்வன்’ படத்தில் பணிபுரிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடித்த ‘அஞ்சலி’ திரைப்படம்1990 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் ஆனந்த கிருஷ்ணன். அதன்பின் சதிலீலாவதி உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த நிலையில், அதன்பின் டயலாக் எடிட்டர், சவுண்ட் சூப்பர்வைசர், சவுண்ட் எடிட்டர், சவுண்ட் டிசைனர் போன்ற பணிகளை பல திரைப்படங்களுக்கு செய்துள்ளார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இவர் சவுண்ட் டிசைனராக பணி புரிந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஊடகமொன்றில் அளித்த பேட்டியில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் தான் சவுண்ட் டிசைனராக பணிபுரிந்த அனுபவங்களை கூறியுள்ளார்.

இந்த படத்தின் சவுண்ட் டிசைனர் ஆக ஒரு பெரிய குழுவே பணிபுரிந்தோம் என்றும் ஒரு ஆள் செய்யக்கூடிய வேலை இது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில நேரம் குதிரைக்கு மூச்சுவிடும் சவுண்டு கூட கொடுக்க வேண்டும் என்றும் அது மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலை படித்த எல்லோருக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளதாக தான் நம்புவதாகவும் இந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆனந்தகிருஷ்ணன் தற்போது 'பொன்னியின் செல்வன்’ படத்திலும் பணிபுரிந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.