close
Choose your channels

நடுரோட்டில் நயன்தாராவை கட்டிப்பிடித்தது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Saturday, December 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜர்பைஜானில் நயன்தாரா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு குழந்தை நயன்தாராவை பார்த்து சிரித்ததோடு, அவரை கட்டியணைத்து கன்னத்தை கிள்ளியது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த நயன்தாரா, குழந்தையிடம் கொஞ்சி விளையாடினார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ள பலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.