சூர்யா படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Monday,August 24 2015]

கோலிவுட்டில் தற்போது பல படங்கள் தயாரிக்கப்படும்போது ஒரு டைட்டிலும், அதன்பின்னர் ரிலீஸாகும்போது ஒரு டைட்டிலும் வைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாஸ்' என்ற படம் ரிலீஸாகும் நேரத்தில் 'மாசு என்கிற மாசிலாமணி' என்றும் ஜெயம் ரவியின் அப்பாடக்கர் திரைப்படம் 'சகலகலாவல்லன்' என்றும் மாறியது. தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெறுவதற்காகவே தமிழில் டைட்டில் மாற்றப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வரிசையில் இன்னொரு படத்தின் டைட்டிலும் விரைவில் மாற்றப்பட உள்ளது. சூர்யா, அமலாபால் ஆகியோர்களின் சிறப்பு தோற்றத்தில் குழந்தைகளை மையமாக வைத்து பாண்டியராஜ் இயக்கியுள்ள 'ஹைக்கூ' என்ற திரைப்படத்தின் டைட்டிலும் விரைவில் தமிழில் மாற்றப்படவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாண்டியராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். விரைவில் 'ஹைக்கூ' படத்திற்கு தமிழ் டைட்டில் மாற்றப்படவுள்ளதாகவும், இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டிலை தேர்வு ரசிகளும் உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிந்துமாதவி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கவின், நயனா, அபிமன், கார்த்திக் குமார், வித்யா ப்ரதீப், மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி உள்பட பலர் நடித்துள்ளனர்.சூர்யாவின் 2D எண்டடெயிமெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், பிரவீண் படத்தொகுப்பும் செய்கின்றனர். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

More News

கேப்டன் விஷாலுக்கு வாழ்த்து கூறிய ஆர்யா

விஷால் நடித்த 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்க்கு இருந்த துணிச்சல் தெலுங்கு நடிகர்களுக்கு இல்லையா?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மாபெரும் வெற்றி படம் 'கத்தி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு ....

நஸ்ரியாவின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்

நேரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் தனுஷுடன் 'நய்யாண்டி', மற்றும் திருமணம் ...

கமல்ஹாசனுடன் இணைகிறாரா மெளலி?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக ...

'நிச்சயம் நீ ஜெயிப்பே'. விஜய்யிடம் வாழ்த்து பெற்ற விக்ராந்த்

'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் விக்ராந்த், இளையதளபதி விஜய்யின் உறவினர் என்பது அனைவருக்கும்...