நடிகர் சிம்புவுக்கு சிறப்பு வாய்ந்த பிறந்த நாள் பரிசளிக்கும் துபாய் அரசு!

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

நடிகர் சிம்பு நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் இன்று முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்களில் அப்டேட் நாளை வரும் என்று எதிர்பார்க்கிறது.

இந்த நிலையில் சிம்பு தற்போது துபாய் சென்று இருப்பதாகவும், துபாய் அரசு நாளை அவருக்கு கோல்டன் விசா வழங்க இருப்பதாகவும், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு சிம்பு தனது பிறந்த நாளை துபாயில் தான் கொண்டாடுவார் என்றும் மகத் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பிறந்த நாளன்று துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கெளரவப்படுத்துவதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துபாய் அரசின் கோல்டன் விசாவை ஏற்கனவே சஞ்சய்தத், மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், பார்த்திபன், ஊர்வசி ரெளட்டாலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வரிசைகட்டி ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள்: ஒரு பார்வை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவரா பிக்பாஸ் வின்னர்?  விமர்சனத்துக்கு நெற்றியடி பதில்கொடுத்த தேஜஸ்வி!

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தொலைக்காட்சி

எதிர்பார்த்த தேதியில் அஜித்தின் 'வலிமை' ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கடந்த பொங்கல் தினமே இந்த படம் ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 

ஷாலினி அஜித் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பி.ஆர்.ஓ!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் குறித்த முக்கிய தகவலை அஜீத்தின் பிஆர்ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஆர்.ஆர்.ஆர்', 'ஆச்சார்யாவை' அடுத்து இன்னொரு மெகா பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி!

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.