செல்போனில் இளம்பெண்ணிடம் தகாத பேச்சு: தமிழ் நடிகர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் ஒருவரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளில் பேசிய தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகர் வினாயகன் என்பவர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரன் என்பவர் தனது முகநூலில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் வினாயகன் பெண் சமூக சேவகி மிருதுளா சசிதரனிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு மிருதுளா தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் வினாயகனை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மிருதுளா கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் வினாயகன், தனுஷ் நடித்த 'மரியான்', சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்', விஷால் நடித்த 'திமிறு' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜய் ஆண்டனி - அருண்விஜய் படத்தின் புதிய அப்டேட்!

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'அக்னி சிறகுகள்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு

ஜிப்ரானுடன் இணைந்து 'சிக்ஸர்' அடித்த சிவகார்த்திகேயன்!

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஜிப்ரான் இசையமைத்து வரும்

சியான் விக்ரம் மகனின் 'ஆதித்ய வர்மா' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

சியான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி போய்விட, அதற்கு பதிலாக 'ஆதித்யவர்மா' என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே.

'96' 'ராம்' தங்கைக்கு திருமணம்: மாப்பிள்ளை தொழிலதிபர்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தில் ஜூனியர் ராம் கேரக்டரில் நடித்திருந்தவர் ஆதித்யா. இவர் பிரபல குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆவார்.

விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜிப்ரான்!

சீயான் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து