யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு: மறுதணிக்கையா?

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’மண்டேலா’. ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் அரசியல் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதும் மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் இந்த படத்தை ரசித்து பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அதனால் தங்களது மருத்துவர் சமுதாய மக்களின் மனம் புண்பட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது

இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தை மறு தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது, ’மண்டேலா’ திரைப்படம் மறு தணிக்கை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அதிகாரிகள் அத்துமீறினால் கடையடைப்பு நடக்கும்....! எச்சரிக்கை விடுக்கும் வணிகர் சங்கம்....!

கொரோனாவை காரணமாக வைத்துக்கொண்டு, அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் அத்துமீறி நடந்துகொண்டால்,

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்: நடிகை வீட்டில் தகராறு செய்த உதவி இயக்குனர்

சென்னை மணலி அருகே சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்யவிருந்த நிலையில் அவரது வீட்டில் அவரது காதலரும் உதவி இயக்குனருமான

நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்காதா?

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கர்ப்பமாக இருக்கும்போதும் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பகல்நிலவு' என்பதும் இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்ததை அடுத்து

ஸ்டிராங் ரூம் உண்மையிலேயே ஸ்டிராங் ரூமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது