லெஜண்ட் சரவணன் படத்தில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு ’லெஜண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் நாயகியாக ஊர்வசி ரௌட்டாலா நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுவதாகவும் அதில் பிரபல நடிகை ராய் லட்சுமியின் நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த பாடல் வித்தியாசமாக ஒரு கிராமிய பாணியில் குத்துப்பாட்டு இடம்பெற்றுள்ளதாகவும் அதில் ராய் லட்சுமி செம நடனமாடியிருக்கிறார் என்றும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ராஜசுந்தரம் பணி புரிந்துள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த பாடலின் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடந்துள்ளதாகவும் கலர்ஃபுல்லான இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்,

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பதும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'விக்ரம்' ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்: மாஸ் வீடியோ ரிலீஸ்

உலகநாயகன் கமலஹாசன் நடித்து முடித்துள்ள 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கமல்ஹாசன் சற்று முன்னர் தனது சமூக வலைதளப்

நீ யாருடா அஜித்தை விமர்சிப்பதற்கு? ஆவேசமான ஆர்கே சுரேஷ்

நடிகர் , தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சில சினிமா விமர்சகர்களை ஆர்கே சுரேஷ் தாக்கி

பிரதமர் மோடியை சந்தித்த சூப்பர் ஹிட் படத்தின் குழுவினர்: வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரபல கிரிக்கெட் வீரரிடம் 'பீஸ்ட்' அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர் ஒருவரிடம் 'பீஸ்ட்' அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'எதற்கும் துணிந்தவன்' கெட்டப்பில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை: ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் முருகன் கெட்டப்பில் நடிக்க சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு கூறியுள்ளார் .