சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக பிரபலம் எச் ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிரமுகர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அப்ரார் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் எச் ராஜாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்றும் ஆனால் அவரது தந்தையை ஜெயப்பிரகாஷ் என குறிப்பிட்டு அவரை கொலை செய்ததாகவும் உண்மைக்குப் புறம்பான தகவலை எச்.ராஜா தெரிவித்துள்ளார் என்றும் எனவே அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

More News

உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்...! உருக்கமாக பேசிய முதல்வர்...!

கொரோனாவை பிறருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நிதியுதவி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன என்பதும் இதனால் நலிந்த நடிகர்கள் மற்றும்

ஊரடங்கு நேரத்தில் வங்கிகள் இயங்குமா?

தமிழகத்தில் வரும் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசியில் கூட விளம்பரம் தேடும் காங்கிரஸ்-பாஜக: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

சென்னை- விதிமுறை மீறி வாகனத்தில் ஊர் சுற்றினால் என்ன நடக்கும்?

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.