குஜராத் தேர்தல்: மணக்கோலத்துடன் ஓட்டு போட சென்ற மணமக்கள்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

குஜராத் மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை எட்டு மணி முதல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14தேதியும் வாக்கு எண்ணிக்கை வரும் 18ஆம் தேதியும் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பரூச் என்ற தொகுதியில் இன்று திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய மணக்கோலத்துடன் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு ஜோடியாக வருகை தந்தனர்.

இருவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் திருமண மண்டபத்திற்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். திருமணம் நடைபெறும் நாளிலும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற மணக்கோலத்துடன் வருகை தந்த மணமக்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.