பாலிவுட்டில் ஒரு கூட்டமே அஜித்துக்காக காத்திருக்கின்றதாம்!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

அஜித் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல வசூலை கொடுத்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களிலும், கர்நாடகத்திலும் அஜித் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மேலும் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமைகள், மற்றும் கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை பெற விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டு வருகின்றனர் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அஜித் பாலிவுட் படத்தில் நடிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகரும், 'விவேகம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளவருமான விவேக் ஓபராய் கூறியபோது, 'அஜித் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரை சிவப்பு கம்பளத்துடன் வரவேற்க ஒரு கூட்டமே காதிருக்கின்றது. ஆனால் தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் அவரை பாலிவுட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்று கூறினார்.
ஏற்கனவே அஜித்தின் 'வேதாளம்' திரைப்படத்தின் இந்தி பதிப்பு யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளிவந்து ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அஜித், இந்தி ரசிகர்களுக்கு புதியவர் அல்ல. ஷாருக்கானுடன் 'அசோகா' படத்திலும் ஸ்ரீதேவியுடன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பைக்கை பார்த்தா காலேஜ் பையன் மாதிரி குஷியாகிவிடுவார் அஜித்: விவேக் ஓபராய்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விவேகம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விவேக் ஓபராய் சமீபத்தில் இந்த படம் குறித்தும் அஜித் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்...

5 டிகிரி குளிரில் அசால்ட்டாக சட்டையை கழற்றிய அஜித்: விவேக் ஓபராய் ஆச்சரியம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 97% வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பல்கேரியாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றபோது மைனஸ் 5 டிகிரி வெப்பநிலை இருந்ததாம்...

கமல்ஹாசன் மூன்றாம் தர நடிகரா? தமிழக அமைச்சர்களுக்கு சின்மயி சரமாரி கேள்விகள்

சும்மா இருக்கற சிங்கத்தை சீண்டி பாத்தா இதுதான் கதி என்ற கதையாகிவிட்டது கமல்ஹாசனின் விஷயம்.

கமல் மக்களுக்கு என்ன செய்தார்? அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக அறிவித்தபோது அரசியல்வாதிகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கமல்ஹாசனின் அரசியல் வருகையையும் அவர்கள் எதிர்க்க தயாராகிவிட்டனர்...

கமல்ஹாசனுக்கு ஆதரவளித்த தந்தையும், மகனும்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபகாலமாக தமிழக அரசு குறித்து வெளியிட்ட தைரியமான விமர்சனங்களால் ஆத்திரம் அடைந்த ஆட்சியாளர்கள் அவரை மிரட்டும் தொனியில் நடந்து வருகின்றனர்