புயல் எதனால் ஏற்படுகிறது??? எளிமையான விளக்கம்!

 

பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர். இதை நம் ஊடகங்கள், கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டு இருக்கிறது. அப்புதிய காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இப்படித்தான் நமக்கு சொல்கின்றன.

இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால், கடற்பரப்பில் 26degree Celsius க்கும் அதிகமான வெப்பநிலை ஏற்படும்போது அங்குள்ள காற்றும் வேகமாக வெப்பமாகிறது. அப்படி வெப்பமடையும் காற்று மேல் நோக்கிச் செல்லும். இதனால் அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகும். அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கும்.

இந்நிலையில் மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்கும். இப்படித்தான் முதலில் தாழ்வு நிலை உண்டாகுகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலை என அழைக்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை, பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலா உருமாறுகிறது.

அதிலும் புயல் தோற்றம், வலுவடைவது, வலுவிழந்து போவது என 3 நிலைகள் இருக்கின்றன. இதில் 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எனக் குறிப்பிடப்படுகிறது. அதுவே 31-65 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் அது மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனப்படுகிறது. இப்படி இல்லாமல் அங்கு வீசப்படும் காற்று மேகச்சுருளினால் வேகம் அதிகரித்து அதன் அடர்த்தி, பரபரப்பளவு எல்லாம் வலுவாக மாறி இருந்தால் அது தீவிரமான புயல் என அழைக்கப்படுகிறது.

இப்படி இருக்கும்போது அந்தப் புயல் தன்னுடைய இடத்தை விட்டு நகர்ந்து கடற்கரையை நோக்கி வேகமாக வரும். அதனால் கனமழை, புயல்காற்று போன்றவை வீசுகின்றன. அப்படி நீண்டதூரம் பயணித்தால் மட்டுமே காற்றின் வேகம் குற்நது புயல் வலுவிழக்க முடியும். தற்போது நிவர் புயலும் இதேபோன்ற ஒரு நிலைமையை அடைந்து வருகிறது.

புயலுக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சைக்லோன் (புயல்) என்றே நாம் பெயரிட்டு அழைக்கிறோம். இதுவே மேற்கிந்தியத் தீவுகளில் ஹரிக்கேன் என்றும் வட பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் டைபுன் என்றும் மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரைப் பகுதிகளில் வில்லி வில்லி என்றும், டொர்னடோ (சுழல் காற்று) அழைக்கப்படுகின்றன. இங்கு பெயர்கள் மட்டும் மாறுகிறதே தவிர விஷயம் என்பது ஒன்றுதான்.