வளர்த்தவரையே இரையாக்கிய வளர்ப்பு சிங்கம் !


Send us your feedback to audioarticles@vaarta.com


ஈராக்கின் அல் பராக்கியாவில் வளர்ப்பு சிங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி அகில் ஃப்க்ர் அல் தின் என்ற செல்வந்தர் உயிரிழந்தார்.
ஏற்கனவே சிறுத்தைகள் சிங்கம் மற்றும் பல வனவிலங்குகளை தன் தோட்டத்தில் வளர்த்து புகழ்பெற்ற அகில் ஃப்க்ர் அல் தின், புதிதாக வாங்கிய சிங்கம் ஒன்றே அவரை கடித்துக் கொன்றதுடன் அவரது உடலின் சில பகுதிகளை கடித்து தின்றது.
ஐம்பது வயதான அகில் ஃப்க்ர் தான் புதிதாக வாங்கிய சிங்கத்தை நெருங்கியபோது அது அவர் மீது ஏறிப்பாய்ந்து கடித்து குதறியது. அகில் ஃப்க்ர்ரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்கார் தன் எ கே 47 துப்பாக்கி மூலம் சிங்கத்தைக் கொன்று அகில் ஃப்க்ர்ரின் சடலத்தை மீட்டனர். ஆயினும் சடலத்தின் சில பகுதிகளை அந்த சிங்கம் தின்று விட்டது.
ஈராக் மட்டுமல்லாது வளைகுடா நாடுகள் பலவற்றிலும் சில செல்வந்தர்கள் சிங்கம் புலி போன்ற வன விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
வேட்டைக்காரர்கள் மற்றும் வனவிலங்குகளை கடத்தி கள்ள சந்தையில் விற்போரிடமிருந்து அவற்றை வாங்கி தங்கள் அந்தப்புறங்களில் வளர்ப்பதை பெருமையாகவும் கருதும் அவர்கள் அதை பொது இடங்களில் காட்சிப்படுத்தவும் தயங்குவதில்லை.
ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் தாய்லாந்து இந்தோநேஷியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும் கழுகுகள் கிளி மற்றும் பறவைகள் குரங்கு வகைகள் ஓநாய்கள் கழுதைப்புலி சிறுத்தை சிங்கம் போன்ற வன உயிரிங்கள் கடத்தி வரப்பட்டு செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காக விற்கப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com