close
Choose your channels

சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து?

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் வரும் என்றும் அனேகமாக சிம்புவின் கெட்டப் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ’பத்து தல’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறைமுகமாக அறிவித்து உள்ளது.

அதேபோல் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிங்கிள் பாடல் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளன்று வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு ஏஆர் ரகுமானின் மேஜிக் இசையை ரசிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.