எனது நீண்டநாள் கனவு நனவானது: NC22 படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து வெங்கட்பிரபு!

எனது நீண்ட நாள் கனவு நனவானது என நாக சைதன்யாவின் 22வது படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகயிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. வெங்கட்பிரபுவின் 11 வது படமான இந்த படத்தின் ஒருசில அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

முதல்கட்டமாக நாக சைதன்யா ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக வந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர்களாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பணிபுரிய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பெரியப்பா இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகி இருப்பதாகவும் முதல் முறையாக இளையராஜா மற்றும் என்னுடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும் தற்போது முதல் முறையாக இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ திரைப்படத்தில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' டீசர் ரிலீஸ் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் அமரர் கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. 

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகியானார் 'சூர்யா 41' நடிகை!

சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தில் நடித்து வரும் நடிகை, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

200 கோடி பட்ஜெட் படத்தின் டிரைலர் ரிலீஸ்: காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் கலக்கிய நடிகை!

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாரான தமிழ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் வந்து கலக்கிய புகைப்படம் மற்றும்

10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்த நாளில் செய்த தளபதி விஜய்!

விஜய் தனது பிறந்தநாளின் போது 10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்தநாளின்போது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிறந்த நாளில் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!

தளபதி விஜய் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும், நேற்றைய பிறந்தநாள் மிகச் சிறப்பாக