ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் ஹீரோ, குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவருடைய மூத்த மகள் ஜோவிதா சில சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான "பூவே உனக்காக" மற்றும் "அருவி" என்ற சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.
அதன் பின்னர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஜோவிதா நடிக்க உள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "ஜகாதாத்ரி" என்ற தொடரின் தமிழ் ரீமேக் சீரியலில் ஜோவிதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments