close
Choose your channels

அமெரிக்க டிவி பேட்டியில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தமிழ்ப்படம் என்று கூறிய நடிகை.. நெட்டிசன்கள் கிண்டல்..!

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் விருது பெற்ற எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை தமிழ் படம் என்று பிரபல நடிகை ஒருவர் அமெரிக்க டிவியில் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பதும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி ஆஸ்கர் விருதை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்தவர் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற பாலிவுட் திரைப்படம் என்று கூற அப்போது இடைமறித்த பிரியங்கா சோப்ரா ‘ஆர்.ஆர்.ஆர்’ பாலிவுட் திரைப்படம் அல்ல, அதுவொரு தமிழ் திரைப்படம் என்று கூறினார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

‘ஆர்.ஆர்.ஆர்’ தெலுங்கு படம் என்று கூட தெரியாமல் பிரியங்கா சோப்ரா இருக்கிறாரா? என்றும் அவர் அவர்கள் கேள்வி எழுப்பினர். இவ்வளவுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரண் தேஜா ஜோடியாக ஹிந்தி படம் ஒன்றில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.