close
Choose your channels

'தளபதி 66' திரைப்படத்தில் இணையும் இன்னொரு பிரபலம்: யாராக இருக்கும்?

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பிரபலம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகிவரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த், தந்தையாக சரத்குமார் ஆகியோர் நடித்து வருவதாகவும் அதுமட்டுமின்றி பிரபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகி நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாவது நாயகி தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை என்று கூறப்படுவதால் அந்த நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos