close
Choose your channels

பின்னி மில்லில் பயங்கர தீவிபத்து: 'தளபதி 63' பட அரங்குகள் எரிந்து நாசம்

Thursday, May 2, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்த அரங்குகளில் விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று இந்த அரங்குகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு அரங்குகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இன்று இந்த அரங்குகளில் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் உயிர்ச்சேதம் இல்லை என்பது ஒரு ஆறுதலான தகவல்
 

Get Breaking News Alerts From IndiaGlitz