கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் நட்சத்திர ஓட்டல் உள்பட ஒரு சில ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு 7 பேர் பலியானதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென அந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த ஓட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகள் 7 பேர் பரிதாபமாக பலியாகி விட்டதாகவும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நோயாளிகள் ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவிபத்தில் அவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News

தமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன் 

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக சிம்பு மற்றும் பார்த்திபன் நடித்து வந்த போதிலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்

உயிர் மற்றும் மானத்தை பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை மூன்று பெண்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார் 

கமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமலஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய திரைப்படம் 'சத்யா'.

லெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்!!!

கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 5) லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தால் இதுவரை 157 பேர் உயிழந்துள்ளனர்.