சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும் நடிகருமான பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அவர் ’தை மகள் வந்தாள்’ என்று கவிதை நயத்துடன் தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு நடிகை சினேகா திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே விஹான் என்ற்அ ஆண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் சினேகா கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போதே அவர் பட்டாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சினேகாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்து உள்ளது என்பதும் சினேகாவின் வீட்டிற்கு வந்த புதுவரால் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சினேகா-பிரசன்னா தம்பதிக்கு சமூகம் வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது