close
Choose your channels

நாளை 'வலிமை' படத்தின் அப்டேட் இருக்கு, ஆனால்...

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் ஆகிய இரண்டு தினங்களில் ஒன்றில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தின் டீசரில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை ‘வலிமை’ படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி படத்தின் டீசர் நாளை வெளியாகாது என்றும் ஆனால் அதே நேரத்தில் நாளை ‘வலிமை’ படத்தின் சில வினாடி வீடியோ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

15 முதல் 20 வினாடிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று நாளை வெளியாகும் என்றும் டீசர் மற்றும் டிரைலர் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாவது சந்தேகம் என்றும் அனேகமாக டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.