'அருவி'யை கொண்டாடும் பத்திரிகையாளர்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 13 2017]

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுகம் ஆதித்திபாலன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'அருவி'. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதே இதற்கு சான்றாக உள்ளது. மேலும் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரிலீசுக்கு முன்னரே பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நல்ல ஓப்பனிங் வசூலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதே திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நிரூபணம் செய்கிறது. படக்குழுவினர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் ஆசி பெற்ற நட்சத்திர தம்பதி

சமீபத்தில் கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் திருமணம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது.

ரிலீசுக்கு முன்பே 'வேலைக்காரன்' படத்தை பார்த்து பாராட்டிய அதிகாரிகள்

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர்களை தவிர அந்த படத்தை பார்ப்பது சென்சார் அதிகாரிகள் மட்டுமே. பொதுவாக சென்சார் அதிகாரிகள் தங்கள் கடமையின் பொருப்பு கருதி படத்தை விமர்சனம் செய்வதோ,

கவுசல்யா தந்தை உள்பட 4 பேர்களுக்கு தூக்குதண்டனை: முழுவிபரம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவருடைய அரசியல் பார்வையும்...

இன்றைய தமிழகம் ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தத்தளித்து வருகிறது. ஆளுமை அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவும்,....

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உள்பட 11 பேர் குற்றவாளி. பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளி