close
Choose your channels

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை!

Monday, July 22, 2019 • தமிழ் Comments

விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

'டிமான்டி காலனி' 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். லலித்குமார் மற்றும் வைகாம் 18 நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த  படத்தின் நாயகியாக கோலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவராகிய ப்ரியா பவானிசங்கர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இவர் கமலஹாசனின் 'இந்தியன் 2,  மற்றும் ஜீவா, அருள்நிதி, அதர்வா, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் தற்போது விக்ரமின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

விக்ரம், பவானி சங்கர் முதன்முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz