close
Choose your channels

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கு: நடிகர் தினேஷ்

Thursday, May 2, 2019 • தமிழ் Comments


பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் தினேஷ் நடித்து முடித்துள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதிரன் ஆதியன் இயக்கியுள்ள இந்த படத்தில் தினேஷுடன் ரித்விகா, அனேகா, முனிஷ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேன்மா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தினேஷ் லாரி டிரைவராக நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து தினேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது: 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதே சமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz