'காவாலா' பாணியில் 'வேட்டையன்' படத்திலும் ஒரு பாட்டு.. டான்ஸ் ஆடுவது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் புரமோசனுக்கு தமன்னா ஆடிய ’காவாலா’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் உதவியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடியது போல் ‘வேட்டையன்’ படத்திலும் ஒரு பாடலை வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த பாடலில் துஷாரா விஜயன் டான்ஸ் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனிருத் கம்போஸிங்கில் உருவாகும் இந்த பாடல் செம பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் நிறைவடையும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.